கொத்தவரங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்!

By Balakarthik Balasubramaniyan
09 Aug 2023, 14:14 IST

சீனி அவரைக்காய் அல்லது கொத்து பீன்ஸ் என்றும் அழைக்கப்படும் கொத்தவரங்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. இதில் உடலுக்கு தேவையான பல மருத்துவ குணங்கள் உள்ளது. சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

உடல் பருமன்

கொத்தவரங்காயை உணவில் சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். ஏனெனில், இதில் நார்ச்சத்து மிக அதிகமாக காணப்படுகிறது. எனவே, இது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும்.

மலச்சிக்கல்

இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குவதற்கு மிகவும் உதவுகிறது. இதை சாப்பிடுவதால் செரிமானமும் சிறப்பாக நடைபெறும்.

இதய ஆரோக்கியம்

கொத்தவரங்காய் இதயத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இதில், உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் இதயம் தொடர்பான நோய்களைத் தடுக்க உதவுகிறது.

நீரிழிவு நோய்

சர்க்கரை நோயாளிகளுக்கு கொத்தவரங்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள தனிமங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

வலுவான எலும்பு

கொத்தவரங்காய் எலும்புகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில், உள்ள கால்சியம் நமது எலும்புகளை சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது.

சிறந்த இரத்த ஓட்டம்

காய்களில் உள்ள இரும்புச்சத்து உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனால், உடலில் ரத்தம் தட்டுப்பாடு ஏற்படாது.

மன அமைதி

நரம்புகளைத் தளர்வடையச் செய்யும் இரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பணப்பை கொண்டது கொத்தவரங்காய். இதை அடிக்கடி சாப்பிடுவதால், மன அழுத்தம் குறையும்.