பீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா?

By Ishvarya Gurumurthy G
10 Aug 2023, 11:44 IST

பீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? பீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இங்கே காண்போம்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

ஆரம்ப ஆய்வில், மிதமாக பீர் குடிக்கும் ஆண்கள் இதய நோயால் இறப்பதற்கான வாய்ப்பு 42% குறைவாக இருப்பதாகக் காட்டுகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது

ஒரு ஆய்வின்படி, ஒயினுடன் ஒப்பிடும் போது, பீரில் அதிக வைட்டமின் பி, புரதம், ஃபோலேட் மற்றும் நியாசின் உள்ளது கண்டறியப்படுள்ளது.

இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்

பீர் அருந்துபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 21% குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் எண்டோகிரைனாலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வில், பீர் உட்கொள்வது அதில் உள்ள சிலிக்கான் காரணமாக எலும்பு அடர்த்தியை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மூளை சக்தியை அதிகரிக்கும்

பீரில் உள்ள சிலிக்கான் உங்கள் மூளையை ஆரம்பகால அறிவாற்றல் மந்தநிலையிலிருந்து பாதுகாக்கிறது.

அலெற்சியை எதிர்த்து போராடும்

பீரில் உள்ள ஹாப் எனப்படும் ஒரு மூலப்பொருள் ஒரு சிறந்த அலெற்சி எதிர்ப்பு பண்பாக திகழ்கிறது.

எந்த வகையிலும் நாங்கள் யாரையும் மது அருந்துவதை ஊக்குவிக்கவில்லை. மிதமான அளவு பீர் குடிப்பதன் மூலம் மட்டுமே இந்த நன்மைகளைப் பெற முடியும். ஏனெனில் அதிகப்படியான ஆல்கஹால் மற்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.