யூரிக் ஆசிட் லெவலைக் குறைக்க இந்த யோகாசனங்களைத் தினமும் செய்யுங்க

By Gowthami Subramani
26 May 2025, 21:57 IST

உடலில் அதிகளவிலான யூரிக் அமில அளவைக் குறைப்பதற்கு சில ஆரோக்கியமான யோகாசனங்களை மேற்கொள்ளலாம். இதில் அதிக யூரிக் அமிலத்தைக் குறைப்பதற்கு செய்ய வேண்டிய சில யோகாசனங்களைக் காணலாம்

புஜங்காசனம்

இந்த ஆசனம் செய்வது முதுகெலும்பை வலுப்படுத்தவும், சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் யூரிக் அமிலத்தை வெளியேற்றலாம்

திரிகோணசனா

திரிகோணசனா செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும் ஆசனம் ஆகும். இது உடலில் இருந்து அதிகப்படியான யூரிக் அமிலத்தை அகற்ற வழிவகுக்கிறது

பாலாசனம்

இந்த ஆசனம் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இவை இரண்டுமே யூரிக் அமில அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது

பச்சிமோத்தாசனம்

பச்சிமோத்தாசனம் செய்வது முதுகெலும்பை நீட்டவும், சிறுநீரகங்களைத் தூண்டவும், யூரிக் அமிலத்தை வடிகட்டும் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் யூரிக் அமிலத்தைக் குறைக்கலாம்

சவாசனம்

இது மனதிற்கு ஆழ்ந்த தளர்வை ஊக்குவிக்கிறது. மேலும் இது மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் இவை யூரிக் அமில அளவை அதிகரிக்கலாம்

பவன்முக்தாசனா

இந்த ஆசனம் வாயு மற்றும் வீக்கத்தைப் போக்க உதவுகிறது. இது யூரிக் அமில அளவுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். பவன்முக்தாசனா ஆசனம் செய்வது யூரிக் அமில அளவைக் குறைக்கிறது

குறிப்பு

இந்த யோகாசனங்கள் யூரிக் ஆசிட் அளவைக் குறைக்க உதவுகிறது. எனினும், புதிய யோகா பயிற்சியைத் தொடங்குவதற்கு முன், ஒரு சுகாதார நிபுணரை அணுகுவது எப்போதும் சிறந்தது. இது தவிர, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையைப் பராமரிப்பது யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது