PCOS பிரச்னையைக் குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவும் உங்களுக்கு உதவலாம். இதற்காக நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் இங்கே.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
PCOS பிரச்னையைக் குறைக்க நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் அன்றாட உணவு முறையில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சியா விதைகள்
PCOS பிரச்னையைக் குறைக்க, பெண்கள் தங்கள் அன்றாட உணவில் சியா விதைகளைச் சேர்த்து கொள்ள வேண்டும். உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் சியா விதைகளை உட்கொள்ளலாம்.
கேரட்
கேரட் உடலுக்கு மிகவும் நல்லது. இதை சாப்பிட்டால் PCOS பிரச்னை குறைவதுடன் கண் பார்வையும் மேம்படும்.
வாழைப்பழம்
PCOD பிரச்னை உள்ளவர்கள் வாழைப்பழத்தை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.இது உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது.
பாதம் பருப்புகள்
PCOD பிரச்னை இருந்தால், பாதாம் பருப்பை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை உண்பதால், நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும், அடிக்கடி பசி எடுக்காது.