30 வயதுக்கு பின் பெண்கள் இதை கட்டாயம் சாப்பிடனும்!

By Karthick M
18 Sep 2024, 23:44 IST

புரோட்டீன் என்பது உடல் சரியாகச் செயல்படத் தேவையான ஒரு முக்கிய மக்ரோநியூட்ரியண்ட் ஆகும். தசை வலு, வளர்ச்சி, எடை மேலாண்மை என அனைத்துக்கும் இது முக்கியம்.

நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் என வயது முதிர்வின் போது வரும் அனைத்து பிரச்சனையையும் சரிசெய்ய புரதம் நிறைந்த உணவு முக்கியம்.

குறிப்பாக வாழ்நாளில் பல பொறுப்புகளை சந்திக்கும் பெண்கள் வயது அதிகரிக்கும் போது உணவு முறையில் சிறப்பு கவனம் செலுத்து வேண்டியது மிக அவசியம்.

உங்கள் உணவில் புரதம், கார்போஹைட்ரேட், பைபர் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் அளவை கவனிக்கவும்.

உங்களுடைய எடையை 1.2 கிராம் முதல் 1.6 கிராம் உடன் பெருக்குவதன் மூலம் சரியான புரோட்டீன் அளவை அறிந்துகொள்ளலாம். தினசரி இத்தனை அளவு புரோட்டின் மிக முக்கியம்.

புரோட்டீன் நிறைந்த உணவுகள் வளர்சிதை மாற்ற விகிதம் மற்றும் பசியைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான எடை இழப்பிற்கு உதவுகிறது.