பெண்களே!! அந்தரங்க உறுப்பை இப்படி முறையா சுத்தப்படுத்துங்க!
By Kanimozhi Pannerselvam
30 Jan 2024, 15:22 IST
ரசாயன சோப்புகள் வேண்டாம்
குறிப்பாக பிறப்புறுப்பு மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதியாகும். ரசாயன சோப்புகளைப் பயன்படுத்துவதால் பிறப்புறுப்பின் pH அளவைத் தொந்தரவு செய்யலாம். மோசமான pH வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
வெதுவெதுப்பான நீர்
வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி உங்களுடைய விரல்களைக் கொண்டு மென்மையாக பிறப்பு உறுப்பை கழுவ வேண்டும். இல்லையெல் மென்மையான துணியை பயன்படுத்தியும் சுத்தப்படுத்தலாம்.
உங்கள் பிறப்புறுப்புப் பகுதியைக் கழுவுவதற்கு வாசனையற்ற சோப்பைப் பயன்படுத்தவும். ஏனெனில் கடுமையான வாசனை கொண்ட சோப் அல்லது பாடி வாஷ்களை பயன்படுத்துவது எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.
முழுமையான சுத்தம்
வெளிப்புற லேபியா மற்றும் யோனியை சுற்றியுள்ள அனைத்து தோல் பகுதிகளையும் தண்ணீர் ப்ளாஷ் செய்து நன்றாக கழுவி சுத்தப்படுத்த வேண்டும். நீங்கள் கையடக்க ஷவர் ஜெட் மூலம் தண்ணீரை பயன்படுத்தி சுத்தப்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சோப்புகளை நீக்குதல்
பிறப்பு உறுப்பைச் சுற்றியுள்ள சோப்பை நன்றாக கழுவி நீக்கிவிட்டதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெல் இவை அந்தரங்க உறுப்பில் உள்ள மென்மையான சருமத்தை வறட்சி அடையவோ அல்லது எரிச்சலடையவோ செய்யலாம்.
சுத்தமாக உலர்த்தவும்
பிறப்பு உறுப்பை தண்ணீர் மற்றும் சோப் கொண்டு கழுவி முடித்ததும், சுத்தமான மற்றும் மென்மையான டவலைக் கொண்டு துடைக்க வேண்டும். டவலை அழுத்தி துடைக்காமல், மெதுவாக துடைத்து உலர்த்த வேண்டும்.
இதை பயன்படுத்தக்கூடாது
நல்ல பிறப்புறுப்பு சுகாதாரத்தை பேணி காக்க விரும்பினால், டவுச்கள், வாசனை துடைப்பான்கள் மற்றும் டியோடரண்ட் ஸ்ப்ரேக்கள் ஆகியவற்றிலிருந்து விலகி இருங்கள்.