சூரிய ஒளியில் இருந்து நம்மை காக்க உதவும் சன்ஸ்கிரீன் கிரீமை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் ஆபத்துதான் தெரியுமா?
சூரிய ஒளி வெளிப்படுத்தும் புற ஊதா கதிர்களில் இருந்து நம் சருமத்தை காக்க சன்ஸ்கிரீன் கிரீம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இதனை பயன்படுத்துவதற்கென சில முறைகள் உள்ளன. அதிகபடியாக பயன்படுத்தினால் தோல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
சென்சிடிவ் சர்மம் கொண்டவர்கள் சன்ஸ்கிரீன் கிரீம் பயன்படுத்துவதற்கு முன் தோல் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். இதனை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் உங்கள் சருமம் ஆபத்தை நோக்கி செல்லும்.
சன்ஸ்கிரீன் கிரீமை எல்லா நேரங்களுலும் பயன்படுத்தக்கூடாது. வெயிலில் வெளிப்படும் போதும், சிஸ்டம் வொர்க் செய்யும் போதும், குறைந்த அளவில் மட்டுமே, சன்ஸ்கிரீன் கிரீம் பயன்படுத்த வேண்டும்.
சன்ஸ்கிரீன் கிரீம் தடவிய உடன் வெளியே செல்லக்கூடாது. வெளியே செல்லும் 1 மணி நேரத்திற்கு முன் சன்ஸ்கிரீன் கிரீம் தடவ வேண்டும். இல்லையெனில் கிரீம் தடவி பலன் கிடைக்காமல் போகும்.
உங்களுக்கு அதிகமாக வியர்க்கும் என்றால், 5 மணி நேரத்திற்கு ஒரு முறை குறைந்த அளவில் சன்ஸ்கிரீன் கிரீம் உபயோகிக்க வேண்டும். இதனை தடவும்போது, முகத்தை நன்கு துடைக்க வேண்டும்.
முகப்பரு உள்ளவர்கள் சன்ஸ்கிரீன் கிரீம் தடவுவதை தவிர்க்க வேண்டும். இது முகப்பருவின் தாக்கத்தை அதிகரிக்கும். மேலும் தோல் தடிப்பு, தோல் சிவத்தல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
சன்ஸ்கிரீன் கிரீமில் பயன்படுத்தப்படும் இராசயனம் சிலரது சருமத்திற்கு ஏற்றுக்கொள்ளாது. இது சருமத்தில் அரிப்பு, வீக்கம், சிவத்தல் போன்றவற்றை ஏற்படுத்தும். வாசனை பொருட்களை உள்ளடக்கிய சன்ஸ்கிரீன் கிரீமை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
சன்ஸ்கிரீன் கிரீம் கண்களில் படாமல் பார்த்துக்கொள்ளவும். இது கண் சிவத்தல், அரிப்பு, வீக்கம் மற்றும் பார்வை திறனை பாதிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்கு சன்ஸ்கிரீன் கிரீம் தடவுவதை தவிர்க்கவும். அவர்களது சருமம் மென்மையாக இருப்பதால், இதில் உள்ள இரசாயனம், அவர்களது சருமத்தை பாதிக்கும்.