40 வயதிலும் அழகு தேவதையாய் ஜொலிக்க இதை தினமும் செய்யுங்கள்!
By Kanimozhi Pannerselvam
20 Dec 2023, 12:43 IST
ஃபேஸ்வாஷ்
முகத்தை அடிக்கடி சுத்தப்படுத்துவதும், சரும பராமரிப்பில் முக்கியமானது. இதற்கு நல்ல க்ளென்சரை தேர்வு செய்வது அவசியம்.
ஆன்டி - ஏஜிங் புரோடக்ட்ஸ்
40 வயதில் தோலில் மெல்லிய சுருக்கங்கள், கோடுக்ள் போன்றவை ஆரம்பிக்கும். இதனைத் தவிர்க்க ஆன்டி- ஏஜிங் சாதனங்களை பயன்படுத்த வேண்டும். ரெட்டினோல், வைட்டமின் சி மற்றும் பெப்டைடுகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை பயன்படுத்துங்கள்.
சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் லோஷனைப் பயன்படுத்துவது அவசியம். சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுக்கும்போது, அதில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட SPF உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஹைட்ரேஷன்
ஹைட்ரேஷன் வயதாக, வயதாக சருமம் ஈரப்பதத்தை இழக்கிறது. இது சரும வறட்சி மற்றும் மந்தமான நிலைக்கு வழிவகுக்கும். இதனை எதிர்த்துப் போராட உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். இதற்கு கற்றாழை அல்லது கிளிசரின் கொண்ட சீரத்தை பயன்படுத்தலாம்.
கண்களுக்கு கவனம் செலுத்துங்கள்
கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது. எனவே வயதான அறிகுறிகள் கண்களைச் சுற்றி மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் தோன்றும். எனவே கண்களுக்குக் கீழே ஹைட்ரேட்டிங் ஐ கிரீம் அல்லது சீரம் தடவலாம்.
போதுமான உறக்கம்
ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு போதுமான தூக்கம் அவசியம். தூக்கமின்மை கண்களைச் சுற்றி கருவளையம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். தினமும் 7-9 மணி நேரம் தூங்கினால் உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆரோக்கியமான உணவு
ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு உண்பது உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதங்களை நிறைய சாப்பிடுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்கள், அதிகப்படியான உப்பு மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.