பப்பாளிப் பழத்துடன் சிறிதளவு தயிர் அல்லது பால் சேர்த்து நன்றாக மசித்து அதனை முகத்தில் அப்ளை செய்யவும்.15 நிமிடத்திற்கு பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ சருமம் மென்மையாகும்.
தேனில் பால்,தயிர்,அரைத்த எள்ளு எல்லாம் சரிசமமாக கலந்து தேய்த்து வந்தால் முகம் பளபளப்பாகவும்,மிருதுவாகவுமாகும்.
பரு,கரும்புள்ளி அல்லது வெடிப்பு உள்ள முகத்திற்கு காய்ச்சிய 1 கப் பால் குளிர்ந்த பிறகு 1/2 எலுமிச்சையை பிழிந்து,கலந்து கழுவினால் நல்லது.
பச்சை நிற ஆப்பிளின் சாறு தோல் சுருக்கம்,அரிப்பு,வெடிப்பு அனைத்திற்கும் மிக நல்லது. சந்தனம், முல்தானிமட்டி கலந்த, பேஸ் பேக் உபயோகித்து வர, முகம் பொலிவாகவும்,மிருதுவாகவும் மாறும்.
கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.
முகத்தில் கருமை மறைய முள்ளங்கி சாற்றுடன் சிறிதளவு மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மறையும்.