வெயில் காலம் என்றாலே சருமம் மற்றும் முடி பிரச்சினைகள் அதிகமாக காணப்படும். நம்மில் பலர் சரும பிரச்சினைகளுக்கு டீ ட்ரீ எண்ணெய் பயன்படுத்துவோம். தினசரி தோல் பராமரிப்பு வழக்கத்தில் டீ ட்ரீ ஆயிலை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் இங்கே.
முகப்பரு நீங்கும்
டீ ட்ரீ ஆயிலில் உள்ள அமிலம் பூஞ்சை தொற்றுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. பாதாம் மற்றும் ஆலிவ் ஆயிலுடன் டீ ட்ரீ ஆயிலை சேர்த்து முகத்தில் மசாஜ் செய்து வர முகப்பரு குறையும்.
கரும்புள்ளி நீக்கும்
முகத்தின் அழகை கரும்புள்ளிகள் கெடுக்கும். முல்தானி மிட்டியில் சில துளி டீ ட்ரீ ஆயில், சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் தடவி வர, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகம் அழகாகும்.
முகம் பளபளக்கும்
முகத்தை பளபளப்பாக மாற்ற டீ ட்ரீ ஆயிலை தக்காளி சாறுடன் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் உங்கள் முகம் ஒரே வாரத்தில் பிரகாசிக்கும்.
காயங்கள் குணமாகும்
டீ ட்ரீ ஆயிலுக்கு காயங்களை குணப்படுத்தும் திறன் உள்ளது. இதில், உள்ள ஆண்டிசெப்டிக் பண்புகள் காயங்களை விரைவாக ஆற்றும். அத்துடன் காயத்தின் தழும்புகளையும் அகற்றும்.
தோல் அழற்சி
டீ ட்ரீ ஆயில் அழற்சி, அரிப்பு, தோல் எரிச்சல், தடிப்பு ஆகியவற்றை சரி செய்யும். இந்த எண்ணையில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் தோல் சம்மந்தமான அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்யும்.
உடல் துர்நாற்றம்
கோடை காலத்தில் ஏற்படும் உடல் துர்நாற்ற பிரச்சினையை டீ ட்ரீ ஆயில் சரிசெய்யும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை நீக்கி, உடல் துர்நாற்றத்தை குறைக்க உதவும்.