தமன்னாவின் தகதக சருமத்திற்கு இந்த ஃபேஸ் ஸ்க்ரப் தான் காரணமாம்!

By Kanimozhi Pannerselvam
05 Feb 2024, 15:43 IST

தேவையான பொருட்கள்

தமன்னா போல் தங்கம் போல் ஜொலிக்கும் சருமத்தை பெற தேன், சந்தன பவுடர்,காபி ஆகிய 3 பொருட்கள் மட்டுமே போதும். இவை அனைவரது வீட்டிலும் எளிதில் கிடைக்கக்கூடியவையாகும்.

தேன்

தேன் சரும வறட்சியைப் போக்கி நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இதிலிருக்கும் ஆன் டி பாக்டீரியா பண்புகள் சருமத்துளைகள் வரை ஆழமாக சென்று சருமத்தை சுத்தம் செய்யும்.

சந்தன பவுடர்

எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சந்தன பவுடர் அல்லது சந்தனத்தை இழைத்து பயன்படுத்தலாம்.

காபி

சருமத்தில் படிந்துள்ள அழுக்குகளால் சருமம் பொலிவிழந்து காணப்படும். அதை காபி பவுடர் அகற்ற உதவுகிறது.

தயார் செய்வது எப்படி?

1 டீஸ்பூன் சந்தன பவுடர், சிறிதளவு தேன் மற்றும் காபி பவுடர் ஆகியவற்றை நல்ல பேஸ்ட்டாக கலக்கி கொள்ளவும். இந்த பேஸ்ட் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை அகற்றி எக்ஸ்ட்ரா பொலிவை தருகிறது.

அப்ளே செய்வது எப்படி?

இந்த பேஸ்ட்டை முதலில் முகத்தில் தடவி லேசாக ஸ்க்ரப் செய்யவும். சுமார் 10 நிமிடங்கள் கழித்து நார்மல் தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் ஸ்க்ரப்பை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம் என தமன்னா தெரிவித்துள்ளார்.