கொட்டாவி
கொட்டாவி என்பது நாம் சோர்வாக, சலிப்படையும்போது வரும் இயற்கையான எதிர்வினையாகும். ஆனால் அடிக்கடி கொட்டாவி வரும்போது, அது டிப்படை உடல்நலப் பிரச்சினையைக் குறிக்கிறது
தூக்கக் கோளாறுகள்
சில தூக்கக் கோளாறுகள் அதிகப்படியான கொட்டாவியை ஏற்படுத்தலாம். தூக்கத்தில் மூச்சுத்திணறல், தூக்கத்தின் போது சுவாசம் தடைபடுவது, அதிக பகல் தூக்கம் போன்றவற்றால் அடிக்கடி கொட்டாவி வரலாம்
தூக்கமின்மை
அடிக்கடி தூக்கமின்மை அல்லது நாள்பட்ட சோர்வுக்கான அறிகுறியாகவும் அதிகப்படியான கொட்டாவி ஏற்படலாம். போதுமான தூக்கம் இருந்த போதிலும் அதிகம் கொட்டாவி விடுவது, சோர்வை எதிர்த்துப் போராட உடலுக்கு அதிக ஓய்வு தேவைப்படுவதைக் குறிக்கிறது
மன அழுத்தம்
கவலை மற்றும் மன அழுத்தம் காரணமாக கொட்டாவி அடிக்கடி ஏற்படுகிறது. அதிக பதற்றத்தில் இருக்கும் போது உடல் இயற்கையாக ஆழமான சுவாசத்தை எடுத்து ஆக்ஸிஜன் உட்கொள்ளை அதிகரிக்கிரது. அதாவது கொட்டாவி சுவாச முறைகளை சீராக்குகிறது
மருந்தின் பக்க விளைவுகள்
அதிகளவு கொட்டாவி வருவது சில மருந்துகளின் பக்க விளைவுகளாக இருக்கலாம். ஆண்டிடிரஸண்ட்ஸ், ஆன்டிசைகோடிக்ஸ் மற்றும் மயக்க மருந்துகள் போன்ற மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் மருந்துகள், மருந்துகளுக்கு எதிர்வினையாக செயல்பட்டு அதிகப்படியான கொட்டாவியைத் தூண்டலாம்
மருத்துவ நிலைமைகள்
அதிகப்படியான கொட்டாவி மருத்துவ நிலைகளுடன் தொடர்புடையதாகும். இதயப் பிரச்சனைகள் அல்லது வாஸோவாகல் சின்கோப் போன்ற சில இருதய பிரச்சனைகளின் அறிகுறியாகவும் அதிகளவு கொட்டாவி வரலாம்
குறிப்பு
அதிகப்படியான கொட்டாவி வருவதற்கு இந்த நிலைமைகள் காரணமாகலாம். எனினும் தொடர்ந்து விவரிக்க முடியாத அளவுக்கு அதிகமான கொட்டாவியை அனுபவித்தால், மற்ற அறிகுறிகளுடன் சுகாதார நிபுணர்களைக் கலந்தாலோசிப்பது நல்லது