மழைக்காலத்தில் கண்களை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்.!

By Ishvarya Gurumurthy G
11 Jul 2024, 14:58 IST

மழைக்காலத்தில் கண் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு. இதனை சமாளிக்க சில குறிப்புகள் உள்ளன. அதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.

ஃபேஸ் வாஷ்

மழைக்காலத்தில் அவ்வப்போது முகம் கழுவவும். இதன்போது கண்களில் தண்ணீர் தெளித்து கழுவவும். பின் சுத்தமாக துணியால் கண்களை கழுவவும்.

தொட வேண்டாம்

அடிக்கடி கண்களை தொடுவதை தவிர்க்கவும். கைகள் அழுக்காக இருக்கலாம். இதில் பாக்டீரியாக்கல் இருக்கலாம். ஆகையால் கண்களை தொட வேண்டாம்.

ஐ டிராப்ஸ்

உங்கள் கண்களைப் பாதுகாக்க, மருத்துவரின் ஆலோசனையின்படி கண் சொட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். கண் சொட்டுகள் போடுவதால் கண்கள் சுத்தமாக இருக்கும்.

ஒப்பனையைப் பகிர வேண்டாம்

கண்களில் பயன்படுத்தப்படும் மேக்கப் பொருட்கள் மற்றும் பிரஷ்கள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். இப்படி செய்வதன் மூலம் பாக்டீரியா ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவும்.

தண்ணீர் குடிக்கவும்

மழைக்காலத்திலும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இது கண்களை உலர விடாமல் பார்த்துக்கொள்ளும். மேலும் உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ளும்.