செரிமான சக்தி குறைந்தால் என்ன சாப்பிட வேண்டும்?

By Karthick M
21 Mar 2024, 01:19 IST

செரிமானம் மேம்படுத்த வழிகள்

உணவை நன்றாக ஜீரணிக்க வலுவான செரிமான சக்தி இருப்பது மிகவும் முக்கியம். பலவீனமான செரிமான சக்திக்கு பல காரணங்கள் உண்டு. சிலவற்றை உட்கொள்வதன் மூலம் உங்கள் செரிமான சக்தியை வலுவாக வைத்திருக்க முடியும்.

தயிர்

உங்கள் செரிமான சக்தியை வலுப்படுத்த தயிர் சாப்பிட வேண்டும். இது வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவாகும். இது வயிற்றுக்கு நன்மை பயக்கும்.

ஆப்பிள்

உங்கள் செரிமான சக்தி பலவீனமாக இருந்தால் உங்கள் உணவில் ஆப்பிளை சேர்க்க வேண்டும். இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.

பெருஞ்சீரகம் மற்றும் எலுமிச்சை சாறு

வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை போக்க பெருஞ்சீரகம் சாப்பிடலாம். அதேபோல் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதும் செரிமான சக்தியை மேம்படுத்தும்.

இஞ்சி

செரிமான சக்தியின் பலவீனத்தை போக்க ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இஞ்சியை சாப்பிடலாம். இது வாயு மற்றும் அஜீரண பிரச்சனையை போக்கும்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

உங்கள் செரிமான சக்தி பலவீனமாக இருந்தால் இதை உட்கொள்ளலாம். அதேநேரத்தில் பொரித்த மற்றும் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை குறைக்க வேண்டும்.