மன உளைச்சலைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

By Gowthami Subramani
18 Aug 2024, 15:30 IST

மன உளைச்சல்

தனிப்பட்ட சவால்கள், வேலை அழுத்தங்கள் போன்றவற்றால் சிலர் அதிகமாக உணர்வர். இது மன அழுத்தத்தை உண்டாக்கும். இந்த உணர்வுகளை நிர்வகிக்கவும் கட்டுப்பாட்டை மீண்டும் பெறவும் சில எளிய வழிகள் உள்ளன

ஆழமான மூச்சு

மன அழுத்தம் ஏற்படும் போது, நம் உடலின் இயல்பான பதில் கூட பதற்றத்தை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க சில ஆழமான சுவாசங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆழமாக சுவாசிப்பதன் மூலம் அதிகரித்த இதயத்துடிப்பைக் குறைக்கவும், உடலைத் தளர்வடையும் செய்யலாம்

சிறிய நடைபயிற்சி

மன அழுத்தத்தை குறைக்க உதவும் செயல்பாடுகளில் சிறிய நடைபயிற்சியும் அடங்கும். குறிப்பாக வெளியில் நடைபயிற்சி செல்வது பதட்டத்தைக் குறைக்கவும், கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கவும் உதவுகிறது

பணிகளைப் பிரிப்பது

வேலை அதிகமாகச் செய்ய வேண்டியிருப்பதாகவோ, எங்கு தொடங்குவது என்று தெரியாமல் இருப்பதோ அதிகமாக உணரப்படுவதற்கான பொதுவான காரணமாக அமைகிறது. இதைச் சமாளிக்கவும், பணிகளை நிர்வகிக்கவும், சிறிய படிகளாக பிரித்து செய்யலாம்

மற்றவர்களுடன் பேசுவது

சில சமயங்களில், நம்பிக்கையான ஒருவரிடம் பேசுவது அதிகப்படியான உணர்வுகளில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. அது ஒரு நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது சக ஊழியராக இருப்பினும், எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஆதரவு உணர்வை அடைய முடியும்

சுயகவனிப்பு

போதுமான தூக்கம், நீரேற்றமாக இருப்பது உள்ளிட்ட சுய கவனிப்பு முறைகளைக் கையாள வேண்டும். இது உடல் மற்றும் மனதை ஒருங்கிணைத்து அமைதிப்படுத்த உதவுகிறது

எல்லையை பராமரிப்பது

சில சமயங்களில் அதிக வேலையை எடுத்துக் கொள்வது அதிகமாக உணர்தலை ஏற்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில் கூடுதல் பணிகள் அல்லது பொறுப்புகள் வேண்டாம் என்று கூறி எல்லைகளை அமைக்க கற்றுக் கொள்ள வேண்டும்

டிஜிட்டல் டிடாக்ஸ்

செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாடுகள் சில சமயங்களில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக மன அழுத்தம் நிறைந்த காலங்களில் செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்