ஒருவருக்கு புத்திக் கூர்மை என்பது மட்டும் இருந்துவிட்டால் போதும் எதையும் சாதித்து விடலாம். உங்கள் மூளைக்கு ஆற்றலளிக்கக் கூடி சில குறிப்புகளை விரிவாக பார்க்கலாம்.
உடற்பயிற்சி
உடல் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருப்பதே சிறந்த முடிவகளை எடுக்கும் தன்மை மேம்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது. குறைந்தபட்சம் தினசரி வழக்கமான வொர்க் அவுட்டை நிர்ணயித்து உங்களை நீங்களே அதற்கு தயார் செய்துக் கொள்ளவும்.
சூரிய ஒளி அவசியம்
உங்களுக்கு தேவையான வலிமையையும் ஆற்றலையும் சூரிய ஒளி வழங்கும். வெயிலில் சிறிது நேரம் செலவழிக்க முடியாவிட்டால், வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸை மிதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நண்பர்களும் கலந்துரையாடலும்
தனிமை உங்கள் இரத்த அழுத்தத்தை உயர்த்தலாம், தூக்கமின்மை, மனச்சோர்வு போன்றவற்றுக்கு வழிவகுக்கும். எனவே உங்களைச் சுற்றி ஒரு நல்ல ஆதரவு அமைப்பை உருவாக்குங்கள். ஆரோக்கியமான நண்பர்களை இணைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தாருடன் உரையாடுங்கள்.
தியானம்
தியானம் உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஓய்வெடுக்கவும் உதவும். தினமும் குறைந்தது 10-15 நிமிடமாவது தியானம் செய்தால், உங்கள் மனம் விழிப்புடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
நல்ல தூக்கம்
அதிகாலையில் எழுந்து நள்ளிரவு வரை வேலை செய்தால் பல சிக்கல் வரக் கூடும். நிம்மதியான ஆரோக்கியமாக தூக்கம் தேவை. தினசரி 6-8 மணிநேரம் தூக்கம் தேவை.
நல்ல உணவு
ஊட்டச்சத்து உள்ள நல்ல உணவு என்பது மிக முக்கியம். ஊட்டச்சத்து குறைபாடு உடலை மட்டுமல்ல, மூளையையும் பாதிக்கிறது. ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.