திடீர்ன்னு குடிக்கிறத நிறுத்துனா... உடம்புல என்னென்ன சிக்கல்கள் வரும்?
By Kanimozhi Pannerselvam
23 Jan 2024, 10:51 IST
தலைவலி
மது அருந்துவதை நிறுத்திய பிறகு தலைவலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும் இந்த தலைவலியானது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கடுமையான வலி நிறைந்ததாக இருக்கலாம்.
நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்
தொடர்ந்து மது குடித்து வந்தவர், திடீரென்று குடிப்பதை நிறுத்தும்போது உடல் குழப்பமடையும். இதனால் மைய நரம்பு மண்டலம் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள சிரமப்படுவதோடு, மூளை கூடுதல் இரசாயனங்களை உற்பத்தி செய்யும். இது விரும்பத்தகாத அறிகுறிகளை ஏற்படுத்தும்.
மதுவை திடீரென விலக்கினால் மனச்சோர்வு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், மதுவைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது மன அழுத்தம். இதன் காரணமாக, எரிச்சல் மற்றும் சோகம் போன்ற உணர்வுகள் பரவலாக உள்ளன.
பசியின்மை
குடிப்பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்தினால் பசியின்மை போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். உணவு உட்கொள்ளல் குறையும் போது, எடையிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
தூக்கமின்மை
மது அருந்துவதை கைவிட்ட பிற கவலை, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதைத் தவிர வேலையில் கவனம் செலுத்த முடியாமல் இதயத் துடிப்பு போன்ற அறிகுறிகளும் தோன்றும். மனதை ஒருமுகப்படுத்த முடியமால் சிரமம் ஏற்படலாம்.