ஆண்களில் டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்க உதவும் சிறந்த சப்ளிமெண்ட்ஸ்

By Gowthami Subramani
19 Dec 2024, 18:18 IST

ஆரோக்கியமான டெஸ்டோஸ்டிரோன் அளவை பராமரிப்பது உடலின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமாகும். குறிப்பாக ஆண்கள் வயதாகும் போது, இயற்கையாகவே டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்க சில சப்ளிமெண்ட்ஸ் உதவுகிறது

வைட்டமின் டி

இது டெஸ்டோஸ்டிரோன் கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த அளவிலான வைட்டமின் டி டெஸ்டோஸ்டிரோன் குறைவதோடு தொடர்புடையதாகும். குறிப்பாக குளிர்கால மாதங்களில் வைட்டமின் டி குறைந்த அளவே கிடைக்கிறது. எனவே வைட்டமின் டி-யை சூரிய ஒளியின் மூலம் பெறலாம் அல்லது தேவைப்பட்டால் வைட்டமின் டி நிறைந்த பொருள்களை எடுத்துக் கொள்ளலாம்

துத்தநாகம்

டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி செய்ய துத்தநாகம் மிகவும் இன்றியமையாததாகும். இதன் குறைபாடு குறைந்த அளவு டெஸ்டோஸ்டிரோனுக்கு வழிவகுக்கிறது. மட்டி, இறைச்சி மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் துத்தநாகம் உள்ளது. இது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு வழிவகுக்கிறது

அஸ்வகந்தா

இந்த மூலிகை மன அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளுக்காக நன்கு அறியப்படுகிறது. இது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும், டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கிறது

வெந்தய சாறு

இது டெஸ்டோஸ்டிரோனை ஈஸ்ட்ரோஜனாக மாற்றும் என்சைம்களைக் குறைப்பதன் மூலம் டெஸ்டோஸ்டிரோன் அளவை ஆதரிக்கிறது

மக்னீசியம்

மெக்னீசியம் குறைபாடு குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவுகளுடன் தொடர்புடையதாகும். எனவே டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்க போதுமான அளவு மெக்னீசியம் நிறைந்த உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்