முதுகு வலி விடுபட டிப்ஸ்
சில எளிய வழிகளை பின்பற்றி முதுகு வலி பிரச்சனையில் இருந்து எளிதாக விடுபடலாம். இதுகுறித்த தகவலை இந்த பதிவை முழுமையாக படித்துத் தெரிந்துக் கொள்வோம்.
பெட் ரெஸ்ட் அதிகம் கூடாது
முதுகு வலி உள்ளவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் பெட் ரெஸ்ட் எடுக்கக் கூடாது. முடிந்தவரை உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது நல்லது.
தீவிர உடற்பயிற்சி
ஜிம்மில் தீவிரமான உடற்பயிற்சி மேற்கொள்வதும் இதற்கு காரணமாக இருக்கலாம். முறையான உடற்பயிற்சி அவசியம் என்றாலும் அதில் கவனம் தேவை.
கீழ் முதுகு வலி
கீழ் முதுகு வலியைக் குறைக்க மாத்திரை எதுவும் இல்லை. வலுப்படுத்தும் பயிற்சிகள் தான் உதவியாக இருக்கும். முறையான நிபுணரை ஆலோசிப்பது நல்லது.
வயிற்று தசைகள் பலவீனம்
வயிற்று தசைகள் பலவீனமாக இருக்கும்போது, மற்ற பகுதிகளில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பலர் வயிற்று தசைகளை வலுப்படுத்துவதன் மூலம் முதுகுவலியிலிருந்து நிவாரணம் பெறுகிறார்கள்.
தொப்பை பிரச்சனை
தொப்பை அதிகமாக இருந்தாலும் முதுகுப் பகுதி வளைந்த நிலையிலேயே இருக்கும். இதனால் கூட முதுகு வலி வரலாம். தொப்பையை குறைக்க முயற்சிக்கவும்.
முழுமையாக படித்ததற்கு நன்றி
படுக்கையை நன்கு பராமரித்து வைத்துக் கொள்ளவும். அதேபோல் வலி தீவிரமாக இருக்கும்பட்சத்தில் உடனே தகுந்த மருத்துவரை அணுகுவது நல்லது.