கால் வீக்கமா இருக்கா? இத ட்ரை பண்ணுங்க

By Gowthami Subramani
13 Jul 2024, 13:23 IST

இன்று பெரியவர்கள் மட்டுமல்லாமல் இளம் வயதினரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் ஒன்றாக கால்களில் அடிக்கடி வீக்கம் உண்டாகலாம். கால் வீக்கத்தைக் குறைக்கும் வீட்டு வைத்தியங்களைக் காணலாம்

கால் வீக்கத்திற்கான காரணம்

கால்வீக்கம் ஏற்படுவது கடுமையான சிறுநீரகம், இதயம் மற்றும் கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. ஆனால் இது நீண்ட நாள் வரை நீடிக்கலாம். எனினும், கால்வீக்கத்தைக் குறைக்க சில வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம்

தேங்காய் எண்ணெய்

சிறிது தேங்காய் எண்ணெயைச் சூடாக்கி, பூண்டு பற்களைச் சேர்த்து எண்ணெயில் வறுக்க வேண்டும். இந்த எண்ணெயைப் பாதங்களில் தடவி, சுமார் 15 நிமிடங்கள் மசாஜ் செய்வது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது

மஞ்சள்

கால் வீக்கத்தில் இருந்து நிவாரணம் பெற மஞ்சள் சிறந்த தேர்வாக அமைகிறது.  ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சளுடன், ஒரு டேபிள் தேங்காய் எண்ணெய் கலந்து வீக்கம் உள்ள இடத்தில் தடவ வேண்டும். இதைக் காய்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்

ஐஸ் பேக்

கால் வீக்கத்தைக் கட்டுப்படுத்த வீட்டிலேயே ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தலாம். ஐஸ் கட்டிகளை வீக்கமடைந்த பகுதியில் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு சிறிது நேரம் கழிவதை வலி குறைவதை உணரலாம்

பேக்கிங் சோடா

இரண்டு ஸ்பூன் அளவு அரிசியை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் பேக்கிங் சோடாவை சேர்க்க வேண்டும். இதை பேஸ்ட் போல பாதங்களில் தடவி, 15 நிமிடம் வைக்க வேண்டும். இது வீக்கத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

கல் உப்பு

வெதுவெதுப்பான நீரில் சிறிது கல் உப்பு சேர்த்து, அந்த நீரில் கால்களை வைக்கலாம். இவ்வாறு செய்வது கால் வீக்கத்திலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது