நுரையீரலை இயற்கை முறையில் சுத்தம் செய்வது எப்படி?

By Karthick M
18 Sep 2024, 19:00 IST

நுரையீரல் பிரச்சனை

நுரையீரல் சரியாக செயல்படாததே பல உடல்நல பிரச்சனைகளுக்கு காரணம். சமீபகாலமாக நுரையீரல் பிரச்சனையால் பலர் அவதிப்படுகிறார்கள். இதை வீட்டிலேயே சரிசெய்வது எப்படி என பார்க்கலாம்.

காற்று சுத்திகரிப்பு கருவி

வீட்டில் காற்று சுத்திகரிப்பு கருவியை நிறுவுவது வீட்டின் காற்றை சுத்தப்படுத்த உதவுகிறது. சுத்தமான சுவாசம் நுரையீரலை சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது.

ஏரோபிக் பயிற்சிகள்

சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், நடனம், ஏரோபிக் பயிற்சிகள் போன்றவற்றை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் செய்வதன் மூலம் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

ஆவி பிடிப்பது

மூலிகை பொருட்கள் மூலம் ஆவி பிடிப்பது காற்று பாதைகளை திறந்து நுரையீரலில் படிந்திருக்கும் சளியை தளர்த்த உதவுகிறது. இது நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ உட்கொள்வது நுரையீரல் வீக்கத்தை குறைக்கவும், புகைப்பிடித்தலால் ஏற்படும் தீய விளைவுகளை குறைக்கவும் உதவும். இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது.

ஆரோக்கியமான உணவுகள்

பெர்ரி, செர்ரி, ப்ரோக்கோலி, டார்க் சாக்லேட், கீரைகள், ஆலிவ், பீன்ஸ் மற்றும் பருப்பு போன்றவற்றை உணவு பழக்கத்தில் சேர்க்கவும். இது நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.