கால் வலியால் அவதியா? இத ட்ரை பண்ணுங்க

By Gowthami Subramani
11 Aug 2024, 09:00 IST

நம்மில் பெரும்பாலோர் சில நேரங்களில் கால் அல்லது கணுக்கால் வலியை அனுபவித்திருப்போம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். கால் வலியை நீக்க சில வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தலாம்

எப்சம் உப்பு குளியல்

எப்சம் உப்பில் உள்ள மெக்னீசியம் சல்பேட் தசைகளை தளர்த்தவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில் எப்சம் உப்பு சேர்த்து கால்களை ஊறவைப்பதன் மூலம் வலி மற்றும் விறைப்புத்தன்மையைக் குறைக்கலாம்

வெந்தய விதை பேஸ்ட்

வெந்தய விதையில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இதற்கு வெந்தயத்தை ஊறவைத்து அரைத்த விழுதை, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வருவதன் மூலம் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கலாம்

அஸ்வகந்தா

ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தா சிறந்த மூலிகையாகும். இது மன அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதற்கு அஸ்வகந்தா பவுடரை வெதுவெதுப்பான பாலில் கலந்து சாப்பிடுவதன் மூலம் தசைகள் வலுவடைந்து கால் வலியைக் குறைக்கலாம்

பூண்டு கடுகு எண்ணெய் மசாஜ்

பூண்டு அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் கடுகு எண்ணெய் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இதற்கு கடுகு எண்ணெயில் பூண்டை சூடாக்கி கால்களில் மசாஜ் செய்வதன் மூலம் வலி மற்றும் விறைப்புத்தன்மையைக் குறைக்கலாம்

மஞ்சள் இஞ்சி தேநீர்

மஞ்சளில் குர்குமின் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. அதே போல, இஞ்சி வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இந்த டீ அருந்துவதன் மூலம் கால் வலியைக் குறைக்கலாம் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம்

எள் எண்ணெய் மசாஜ்

எள் எண்ணெய் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. வெதுவெதுப்பான எள் எண்ணெயைக் கொண்டு கால்களை மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் வலியைக் குறைக்க உதவுகிறது

பிராமி எண்ணெய் மசாஜ்

பிரம்மி எண்ணெயில் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளது. பிராமி எண்ணெயைக் கொண்டு கால்களை மசாஜ் செய்வதன் மூலம் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க முடியும்