சுட்டெரிக்கும் வெயிலில் இந்த ஒரு பழம் சாப்பிட மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க

By Gowthami Subramani
05 Apr 2025, 19:40 IST

கோடைக்காலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவது உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் வெப்ப காலத்தில் ஆரஞ்சு உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்

எடையிழப்புக்கு

ஆரஞ்சு பழத்தில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது

இதய ஆரோக்கியத்திற்கு

ஆரஞ்சு பழம் பொட்டாசியம் நிறைந்ததாகும். இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே இது உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது

செரிமானத்தை மேம்படுத்த

இந்த பழத்தில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது செரிமானத்திற்கு சிறந்த தேர்வாக அமைகிறது. மேலும் இது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது

நீரேற்றத்தைத் தர

ஆரஞ்சு சாப்பிடுவதன் சிறந்த நன்மைகளில் ஒன்றாக, அது உடலுக்கு நீரேற்றத்தைத் தருவது அடங்கும். ஏனெனில், இது அதிகளவிலான நீர்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது கோடையில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

ஆரஞ்சு பழம் வைட்டமின் சி நிறைந்த நல்ல மூலமாகும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது