இன்றைய பிஸியான காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறையால் பலரும் மூட்டு வலியால் அவதியுறுகின்றனர். இந்நிலையில், சில பழங்களை சாப்பிடுவதன் மூலம் மூட்டு வலியைக் குறைக்கலாம்
சிட்ரஸ் பழங்கள்
இதில் அதிகளவிலான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. மேலும் இதில் ஏராளமான வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இவை கொலாஜன் உருவாவதற்கு உதவுகிறது. இதன் மூலம் மூட்டுக்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்
அவகேடோ
இதில் வைட்டமின் ஈ, கே, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளது. இவை அனைத்துமே எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது
பெர்ரி
பெர்ரி பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளது. இவை மூட்டுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது
கிவி
இது உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழமாகும். இதை உட்கொள்வது வீக்கத்தைக் குறைக்க பெரிதும் உதவுகிறது
ஆப்பிள்
இதில் ஃபிளவனாய்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளது. இவை இரண்டுமே வீக்கத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
திராட்சை
திராட்சை பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளது. இவை கீல்வாதத்திற்கு நிவாரணம் வழங்குகிறது
பப்பாளி
பப்பாளி பழம் வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் போன்றவை நிறைந்ததாகும். இவை கீல்வாதத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்