உணவு உண்டவுடன் சோர்வு, சோம்பேறித்தனம், தூக்கம் போன்ற உணர்வு ஏற்படுவதை நம்மில் பலர் அடிக்கடி உணர்ந்திருப்போம். இதற்கான பதிலை பார்க்கலாம்.
புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை உண்டால் சோம்பேறித்தனமாக உணரலாம். புரத உணவில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது செரோடோனின் உற்பத்திக்கு உதவுகிறது.
செரோடோனின் மனநிலையை சரிசெய்கிறது மற்றும் தூக்கத்திற்கு பொறுப்பாகும். செரோடோனின் மனதை அமைதிப்படுத்துகிறது.
கார்போஹைட்ரேட் டிரிப்டோபானை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவுகிறது. அப்படிப்பட்ட நிலையில் புரதச்சத்தும், மாவுச்சத்தும் சாப்பிட்டால் சோம்பலும் தூக்கமும் வருவது உறுதி.
குறிப்பாக சாதம் சாப்பிடுபவர்களுக்கு சோம்பல் கட்டாயம் ஏற்படும். அதே சமயம், சிலர் தேவைக்கு அதிகமாக உணவு உண்பதாலும் சோர்வு ஏற்படலாம்.
அதேபோல் நீரிழிவு நோய்க்கு முந்தைய அல்லது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் உணவை சாப்பிட்ட பிறகு சோர்வாக உணரலாம்.