யாரெல்லாம் வெள்ளரிக்காய் சாப்பிடக்கூடாது தெரியுமா?

By Devaki Jeganathan
15 May 2024, 10:38 IST

வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலில் நீர்ச்சத்து பாதுகாக்கப்படும். ஆனால், இது அனைவருக்கும் நல்லதல்ல. சிலருக்கு இது தீங்கு விளைவிக்கும். யாரெல்லாம் வெள்ளரி சாப்பிடுவதை யார் தவிர்க்க வேண்டும் என பார்க்கலாம்.

சிறுநீர் பிரச்சனை

உங்களுக்கு அதிக சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருந்தால், வெள்ளரிக்காயை அதிகமாக உட்கொள்வது நல்லதல்ல. இது உங்கள் பிரச்சனையை மேலும் அதிகரிக்கலாம்.

அசிடிட்டி பிரச்சனை

உங்களுக்கு அசிடிட்டி பிரச்சனை இருந்தால், வெள்ளரி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது செரிமான பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும்.

சளி அல்லது இருமல்

வெள்ளரிக்கு குளிர்ச்சித் தன்மை உண்டு. இதனால், சளி, இருமல் போன்றவற்றின் போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது குளிர்ச்சியை மோசமாக்கும்.

ஒவ்வாமை

ஒவ்வாமை உள்ளவர்கள் வெள்ளரிக்காயை சாப்பிடக்கூடாது. இதனால், சுவாச பிரச்சனைகள், தோல் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

மழைக்காலத்தில் தவிர்க்கவும்

ஆயுர்வேதத்தின் படி, வெள்ளரிக்காயில் குளிர்ச்சியான பண்புகள் காணப்படுகின்றன. மழைக்காலத்தில் இதை சாப்பிடுவதால் அஜீரணம் ஏற்படும்.

இரவில் சாப்பிடக்கூடாது?

இரவில் வெள்ளரி சாப்பிடாமல் இருப்பது நல்லது. தூங்கும் முன் இதை உட்கொள்வது உங்கள் தூக்கத்தை கெடுக்கும். மேலும், செரிமான பிரச்சனைகளை அதிகரிக்கலாம்.

நீரிழப்பு

வெள்ளரிக்காயை அதிக அளவில் உட்கொள்வது நீரிழப்புக்கு வழிவகுக்கும். அதன் அதிகப்படியான நுகர்வு ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.