உடல் எடையை அதிகரிக்க உணவில் அதிக புரதம் சேர்ப்பது முக்கியமாகும். இது தசையை வளர்க்கவும், வயிறு நிரம்பியதாகவும் உணர வைக்கிறது. மேலும் முட்டை, புரோட்டீன் பவுடர் என பல விருப்பங்கள் இருந்தாலும், உடல் எடையை அதிகரிக்க புரதம் நிறைந்த விதைகளை எடுத்துக் கொள்ளலாம். இதில் எடை அதிகரிக்க சாப்பிட வேண்டிய விதைகளைக் காணலாம்
ஆளி விதைகள்
இது நார்ச்சத்துக்கள் மற்றும் ஒமேகா-3 உள்ளடக்கம் மட்டுமல்லாமல், புரதத்தையும் வழங்குகிறது. இவை செரிமானம் அடைய எளிதானவையாகும். எனவே எடை அதிகரிக்க இதை ஸ்மூத்திகள், பேக்கரி பொருட்கள் அல்லது தானியங்களில் சேர்க்கலாம்
சூரியகாந்தி விதைகள்
இந்த விதைகள் மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் மட்டுமல்லாமல் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த மூலமாகும். மேலும் இவை வைட்டமின் ஈ-யை வழங்குகிறது. இது சருமத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நன்மை பயக்கும்
பூசணி விதைகள்
பூசணி விதைகள் ஆரோக்கியமான எடை அதிகரிப்புக்கு ஒரு சிறந்த வழியாகும். இவை உடலுக்குத் தேவையான புரதத்தை வழங்குகிறது. இதில் மக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இதை வறுத்து எடுத்துக் கொள்ளலாம் அல்லது சாலட்களில் சேர்க்கலாம்
சியா விதைகள்
இது சிறிய மற்றும் வலிமையான விதைகளாகும். இதில் புரதம் மற்றும் நிறைய நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. எடை அதிகரிப்பிற்கு சியா விதைகளை புட்டிங், ஸ்மூத்திகள் அல்லது இரவு ஓட்ஸில் சேர்க்கலாம்
சணல் விதைகள்
இது புரதத்தின் சிறந்த மூலமாகும். இதில் ஆரோக்கியமான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை தசை வளர்ச்சி மற்றும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. சணல் விதைகளை சாலட்கள் அல்லது ஸ்மூத்திகளில் சேர்க்கலாம்