மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கம் காரணமாக பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன. இவற்றில் கொலஸ்ட்ரால் பிரச்சனையும் அடங்கும். இதன் காரணமாக, இதயம் தொடர்பான பிரச்சனைகள், இரத்த அழுத்தம், பலவீனம் போன்ற பல பிரச்சனைகள் காணப்படுகின்றன. இவற்றை குறைக்க என்ன சாப்பிடணும் என பார்க்கலாம்.
கொலஸ்ட்ரால் என்பது என்ன?
கொலஸ்ட்ரால் என்பது ஒரு வகை கொழுப்பு. இது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. இதனால், ரத்த ஓட்டம் குறைந்து இதயம் தொடர்பான நோய்கள் வரலாம்.
ஆப்பிள்
ஆப்பிளில் உள்ள பெக்டின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. உணவில் சேர்த்துக்கொள்வது செரிமான அமைப்புக்கு நல்லது என்று கருதப்படுகிறது.
வாழைப்பழம்
உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க வாழைப்பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
அவகேடோ
அவகேடோ ஒரு சூப்பர்ஃபுட் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இது மிகவும் நன்மை பயக்கும்.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் நார்ச்சத்து உள்ளது மற்றும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
அன்னாசி
உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்காது.
உணவை கவனியுங்கள்
கொலஸ்ட்ராலை குறைக்க, உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதற்காக நீங்கள் ஒரு நிபுணரை அணுகலாம்.