வைட்டமின் சி குறைபாட்டை நீக்க, சில வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும், இது உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
கொய்யாபழம்
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கொய்யாப்பழம், அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளைக் கொண்டுள்ளது. இது தொடர்ந்து உட்கொள்வது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. ஒரு கொய்யாவில் 145 மிகி வைட்டமின் சி உள்ளது.
ஆரஞ்சு பழம்
சிட்ரஸ் பழமான ஆரஞ்சு பழம் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. ஒரு ஆரஞ்சு பழத்தில் 83 மிகி வைட்டமின் சி உள்ளது.
பப்பாளி
145 கிராம் பப்பாளியில் 88 கிராம் அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. மறதி நோய் உள்ளவர்களுக்கு பப்பாளி மிகவும் நல்லதாகும்.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரியிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. 166 கிராம் ஸ்ட்ராபெர்ரி பழத்தில் 97 மிகி வைட்டமின் சி உள்ளது.
கொத்தமல்லி
கொத்தமல்லியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் கே நிறைந்துள்ளது. மேலும் 8 கிராம் கொத்தமல்லியில் 10 மிகி வைட்டமின் சி உள்ளது.
மஞ்சள் குடைமிளகாய்
வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த உணவுகளில் மஞ்சள் குடைமிளகாயும் ஒன்று. ஒரு முழு மஞ்சள் குடைமிளகாயில் 342மிகி வைட்டமின் சி உள்ளது.
ப்ரோக்கோலி
இது புற்றுநோயை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. அரை கப் வேகவைத்த ப்ரோக்கோலியில் 51 மிகி வைட்டமின் சி உள்ளது. மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலனைத் தருகிறது.