அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது பழமொழி மட்டுமல்லாமல், உணவுமுறையிலும் பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது. ஆம். எந்தவொரு உணவையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். இந்த வரிசையில் காபியும் அடங்கும். இதில் அதிகளவு காபி குடிப்பதால் ஏற்படும் விளைவுகளைக் காணலாம்
அதிகரித்த இதயதுடிப்பு
அதிகளவு காஃபின் உட்கொள்வதால் இதயத்துடிப்பு அதிகரிக்கலாம். எனினும் இது அனைவருக்கும் ஏற்படாது. குறிப்பாக, இதய நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது
வயிற்றுப்போக்கு
காபியில் உள்ள காஃபின் மலச்சிக்கல் பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. ஆனால், இதை அதிகளவு எடுத்துக் கொள்வதால் வயிற்றுப்போக்கு பிரச்சனை அதிகரிக்கலாம்
சதை பிடிப்பு
அதிகமாக காஃபினை உட்கொள்வது சதை பிடிப்பு பிரச்சனைகளை உண்டாக்கலாம். இவை சிறுநீரக செயலிழப்பு , இரத்த ஓட்டம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இன்னும் பிற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்
சிறுநீர் போக்கு
அதிகளவு காஃபின் உட்கொள்வதால் சிறுநீர்ப்பையில் தூண்டுதல்கள் ஏற்படுகிறது. இது அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் அவசரமான சிறுநீர் போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்
தூக்கமின்மை
சிலர் பணிச்சுமை காரணமாக, புத்துணர்ச்சி பெறுவதற்கு காபியை எடுத்துக் கொள்வர். இவை சோர்வைத் தடுப்பது மட்டுமல்லாமல் தூக்கமின்மை பிரச்சனைகளையும் உண்டாக்கலாம்
உயர் இரத்த அழுத்தம்
அதிகளவு காஃபின் உட்கொள்வது, நரம்பு மண்டல தூண்டுதலின் விளைவாக இரத்த அழுத்த பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம்
வாந்தி, குமட்டல்
அளவுக்கு அதிகமாக காஃபின் எடுத்துக் கொள்வது வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம்