தினமும் ஜாதிக்காய் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள் இதோ

By Gowthami Subramani
22 Jun 2024, 17:30 IST

தினமும் ஜாதிக்காய் தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் ஜாதிக்காய் நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த

ஜாதிக்காயில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை இரத்த நாளங்களை விரிவுபடுத்தவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது

இதய ஆரோக்கியத்திற்கு

ஜாதிக்காயில் இரும்பு, கால்சியம் மற்றும் மாங்கனீசு சத்துக்கள் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

ஜாதிக்காய் செரிமான நொதிகளைத் தூண்டும் காரணிகளைக் கொண்டுள்ளது. மேலும் வீக்கம், மலச்சிக்கல் போன்ற பொதுவான செரிமான பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் தருகிறது

வாய்வழி ஆரோக்கியத்திற்கு

ஜாதிக்காயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இவை வாய் துர்நாற்றம் மற்றும் வாய்வழி தொற்றுக்களை சமாளிக்க உதவுகிறது

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

ஜாதிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் போன்றவை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதுடன், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது

மூளை ஆரோக்கியத்திற்கு

ஜாதிக்காயில் மைசிலிக்னன் மற்றும் மிரிஸ்டிசின் போன்ற அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்துள்ளது. இது அல்சைமர் போன்ற நரம்பியக்கடத்தல் நோய்களிலிருந்து பாதுகாக்கவும், நினைவாற்றலை மேம்படுத்துவதாக அமைகிறது

தூக்கத்தை மேம்படுத்த

ஜாதிக்காயில் உள்ள குளிர்ச்சியான பண்புகள் தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே தூங்கும் முன் ஜாதிக்காய் தண்ணீர் குடிப்பது தூக்கமின்மை பிரச்சனைக்கு நன்மை பயக்கும்