தினமும் ஒரு கப் சிக்கன் சூப் குடிப்பதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இதனால் நன் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.
எலும்புகள் வலுபெறும்
கோழி எலும்பில் கால்சியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இது உங்கள் எலும்பை வலுபெற செய்கிறது.
இரத்த அழுத்தம் கட்டுப்படும்
கோழியில் அதிக அளவு புரதம் நிறைந்துள்ளன. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
தசைகள் வலுவாகும்
சிக்கனில் உள்ள அமினோ அமிலங்கள் தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
சிக்கன் சூப் குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது வைரஸ் காய்ச்சலில் இருந்து எதிர்த்து போராட உதவுகிறது.
சளி காய்ச்சல் தீரும்
குளிர்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விடுபட சிக்கன் சூப் உதவுகிறது. அதற்கு இதில் மிளகு கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.