சீதாப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6, செரோடோனின், டோபமைன், மனநிலையை கட்டுப்படுத்தும் நரம்பியக்கடத்தியை வெளியிடுகிறது. இந்த வைட்டமின் மனநிலை கோளாறு பிரச்சனையை குறைக்கிறது.
இதய ஆரோக்கியம்
சீதாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம், பிபியைக் கட்டுப்படுத்துகின்றன. இது இதய பிரச்சினைகள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் வைட்டமின் சி இந்த பழங்களில் அதிகம் உள்ளது. இதனால் பெரும்பாலான உடல்நலக் குறைபாடுகள் மற்றும் பருவகால நோய்கள் நீங்கும்.
புற்றுநோய்
சீதாப்பழத்தில் உள்ள ஃபிளாவனாய்டுகள் சில வகை புற்றுநோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. இவற்றை உட்கொள்வதால் பெருங்குடல், வயிறு, மார்பகப் புற்றுநோய்கள் குறையும்.
மலச்சிக்கல்
சீதாப்பழம் அதிக நார்ச்சத்து கொண்டது. இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது. இது ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கு வழிவகுக்கிறது மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.