விளாம்பழம் சாப்பிடுவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

By Gowthami Subramani
30 May 2024, 18:40 IST

கோடையில் உடல் ஆரோக்கியத்திற்கு கண்டிப்பாக உட்கொள்ள வேண்டிய பழங்களில் விளாம்பழமும் ஒன்று. இது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ள பல ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பழமாகும்

உடல் எடை இழப்புக்கு

விளாம்பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது மலமிளக்கிய குணங்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தின் இயற்கையான மேலாண்மைக்கு உதவுகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

வயிறு மற்றும் செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தில் விளாம்பழ சாறு பெரிதும் உதவுகிறது. இது வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது

உடலை சுத்தப்படுத்த

விளாம்பழத்தில் தியாமின் மற்றும் பேலில் ரிபோஃப்ளேவின் போன்ற இரசாயனங்கள் உள்ளது. இது உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. விளாம்பழ சாறு உட்கொள்வது சிறுநீரக நோய் வராமல் தடுக்கவும், குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது

ஆற்றலை அதிகரிக்க

விளாம்பழத்தை கோடைக்காலத்தில் உட்கொள்வது வெயிலின் தாக்கம் மற்றும் கோடை தொடர்பான பிற நோய்களைத் தடுக்க உதவுகிறது. மேலும் இது ஆற்றலை அதிகரிக்கவும், கோடை வெப்பத்தில் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது

சுவாசக் கோளாறைத் தடுக்க

விளாம்பழத்தில் நிறைந்துள்ள பண்புகள் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் தொண்டை புண் போன்ற பல்வேறு சுவாச நோய்களுக்கு நன்மை தருவதாகக் கூறப்படுகிறது

தொற்று அபாயத்தைக் குறைக்க

இதில் வைரஸ், பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை நோய்த்தொற்றுக்களின் அபாயத்தைக் குறைக்கிறது

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த

விளாம்பழத்தை உட்கொள்வது இரத்த ஓட்டத்தில் கார்போஹைட்ரேட்டுகளின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயின் வளர்ச்சியைக் குறைக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் விளாம்பழம் உட்கொள்வது நன்மை பயக்கும்