ஆப்பிள் சைடர் வினிகர் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட ஒரு சூப்பர் ஃபுட்டாகக் கருதப்படுகிறது. இதை நம் அன்றாட உணவில் சேர்ப்பதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்பது குறித்து காணலாம்
எடை இழப்புக்கு
ஆப்பிள் சைடர் வினிகர் எடையிழப்பை ஊக்குவிப்பதாகவும், எடையைக் குறைக்கவும் உதவுவதாக பல ஆய்வுகளில் கூறப்படுகிறது. இதன் நுகர்வு பசியைக் கட்டுப்படுத்துவதுடன், அதிக சிற்றுண்டி உட்கொள்ளலைத் தவிர்க்க உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையிழப்பை மேம்படுத்தலாம்
இரத்த சர்க்கரையை நிர்வகிக்க
இது உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் நன்மை பயக்கும் என்று அறியப்படுகிறது. நீரிழிவு நோய்க்கு முந்தையவர்கள் மற்றும் வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதை எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும்
செரிமானத்தை மேம்படுத்த
உணவுக்குப் பிறகு ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்வது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. ஏனெனில், இது உடலில் செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது
குடல் ஆரோக்கியத்திற்கு
ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. இதனால், இது குடலில் உள்ள ஆரோக்கியமான நுண்ணுயிரியைப் பராமரிப்பதன் மூலம் குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பரு மற்றும் பல்வேறு சரும நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. தசைகளை இறுக்கவும், முகப்பருவை அழிக்கவும் ஆப்பிள் சைடர் வினிகரை டோனராக பயன்படுத்தலாம்
பயன்படுத்தும் முறை
ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரில் 1-2 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரைச் சேர்த்து நீர்த்துப் போகச் செய்ய வேண்டும். இதன் மூலம் அதில் உள்ள அமிலத்தன்மையைத் தவிர்க்கலாம்