ஆங்கிலத்தில் கேப்சிகம் அல்லது பெல் பெப்பர் என அழைக்கப்படும் குடைமிளகாய், நாம் அதிகம் பயன்படுத்தப்படும் காய்களில் ஒன்று. வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து நிறைந்த கேப்சிகம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், இதைஅதிக அளவில் உட்கொள்வது உங்களுக்கு தீங்குவிளைவிக்கும். இதன் தீமைகள் பற்றி பார்க்கலாம்.
இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது
கேப்சிகத்தை அதிக அளவில் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை பன்மடங்கு அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்நிலையில், இதய நோயாளிகள் அதிக கேப்சிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஒவ்வாமை
உங்களுக்கு தோல் அலர்ஜி பிரச்சனை இருந்தால், கேப்சிகம் சாப்பிட வேண்டாம். அதன் அதிகப்படியான நுகர்வு சொறி மற்றும் பருக்கள் போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கிறது.
உடல் சூடு
குடைமிளகாய் சூடான தன்மை கொண்டது. இதை அதிகமாக உட்கொள்வதால் உடலில் வெப்பம் அதிகரிக்கும். அதனால், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சைக்கு முன் அல்லது பின் கேப்சிகம் சாப்பிட வேண்டாம். கேப்சிகம் இரத்த ஓட்டத்தின் அளவை அதிகரிக்கிறது, இதன் காரணமாக உடலில் இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
இரத்த சம்பந்தமான நோய்
இரத்த சம்பந்தமான நோய் ஏதேனும் இருந்தால் குடைமிளகாய் சாப்பிட வேண்டாம். கேப்சிகம் நோயைத் தூண்டும்.