நம்மில் பலரின் வீடுகளில் காணப்படும் மூலிகை செடிகளில் ஒன்று கற்பூரவள்ளி. இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இது இருமல் முதல் இதய நோய்வரை பல பிரச்சினைகளை குணமாக்கும் தன்மை கொண்டது. இதன் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
வயிற்று வலி
கற்பூரவள்ளி இலைகளை உப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து உட்கொள்ளும் போது, வயிற்று வலி மற்றும் அசிடிட்டி பிரச்சினையை குறைக்கும்.
அழற்சி எதிர்ப்பு
கற்பூரவள்ளி இலைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. மேலும், அவற்றை மென்று சாப்பிட்டால் செரிமான மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
வாய் ஆரோக்கியம்
கற்பூரவள்ளியில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இதை மென்று சாப்பிடுவதால் வாய்வழி பாக்டீரியா மற்றும் வாய் துர்நாற்றத்தை குறைக்க உதவுகிறது.
சுவாச பிரச்சினை
கற்பூரவள்ளியில் உள்ள தைமால் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சுவாச ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.
மாதவிடாய் வலி
ஆயுர்வேதத்தின்படி, கற்பூரவள்ளி இலைகளை தொடர்ந்து உட்கொள்வது மாதவிடாய் வலியைப் போக்க உதவும்.
இருமல் மற்றும் சளி
கற்பூரவள்ளி இலையில் உள்ள நோய் எதிர்பார்ப்பு பண்புகள் இருமல் மற்றும் சளியில் இருந்து நிவாரணம் தரும். மேலும், இது தொண்டை வெளியை போக்கவும் உதவுகிறது.
நீரிழிவு நோய்
ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கற்பூரவள்ளி இலைகளை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளின் அபாயத்தை குறைக்கும்.
சிறுநீரக கல்
கற்பூரவள்ளி இலையை தேன் மற்றும் வினிகருடன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கல் பிரச்சினையை குணப்படுத்த உதவுகிறது.