மஞ்சள் உணவுப் பொருட்களில் மட்டுமின்றி மருந்து தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மஞ்சளை எப்படி சாப்பிடுவது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மஞ்சள் டீ
இஞ்சி, கருப்பு மிளகு, ஒரு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் தேன் கலந்து டீ போல உட்கொள்ளவும்.
மஞ்சள் பால்
மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. தினமும், இரவில் தூங்கும் முன் மஞ்சள் பால் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்.
மஞ்சள் மற்றும் துளசி கஷாயம்
துளசி இலை, இஞ்சித் துண்டு, மஞ்சள் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து கஷாயம் செய்யவும். இதனை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தலாம்.
எலுமிச்சை
எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எலுமிச்சம்பழம் மற்றும் மஞ்சளை தண்ணீரில் கலந்து குடிப்பதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.
மஞ்சள் அஜ்வைன் பானம்
இந்த பானத்தை குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். இந்த திரவத்தை குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஐஸ் மஞ்சள் பால்
ஒரு கிளாஸ் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைத்து பின்னர் ஆறவைத்து அதில் ஐஸ் கட்டிகளை சேர்க்கவும். இதை குடிப்பது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
ஆரஞ்சு மஞ்சள் ஸ்மூத்தி
ஆரஞ்சு பழத்திலிருந்து விதைகளை எடுத்து, தண்ணீரில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் சேர்க்கவும். மிக்ஸியில் அரைத்து ஸ்மூத்தி செய்து குடிக்கவும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.