புளிச்ச கீரை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உங்களுக்கு புளிச்ச கீரையை ஒரே மாதரி சமைத்து போர் அடிக்கிறதா? அப்போ கிராமத்து ஸ்டைலில் புளிச்ச கீரை பருப்பு கடையல் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புளிச்ச கீரை - 1 கட்டு, துவரம் பருப்பு - 1 கப், தண்ணீர் - 3 கப், வெங்காயம் - 1 நறுக்கியது, தக்காளி - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 கீறியது, பூண்டு - 4 பற்கள், மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்
கல்லுப்பு - 1 தேக்கரண்டி, புளி தண்ணீர் - 1 மேசைக்கரண்டி, நெய் - 1 மேசைக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்
தட்டிய பூண்டு - 4 பற்கள், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி, சின்ன வெங்காயம் - 1/2 கப் நறுக்கியது, கறிவேப்பிலை.
செய்முறை படி - 1
குக்கரில் ஊறவைத்த துவரம் பருப்பு, தண்ணீர், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, புளிச்ச கீரை, மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிட்டு 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
செய்முறை படி - 2
அடுத்து குக்கரை திறந்து கல்லுப்பு, புளி தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
செய்முறை படி - 3
ஒரு கடாயில் நெய் சேர்த்து உருகியதும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்க்கவும்.
செய்முறை படி - 4
கடுகு பொரிந்ததும் தட்டிய பூண்டு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
செய்முறை படி - 5
அடுத்து வேகவைத்த பருப்பு மற்றும் கீரையை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். சுவையான புளிச்ச கீரை பருப்பு கடையல் தயார்.