சமைக்க நேரம் இல்லையா? தயிர் இருந்தா போதும் தயிர் மசாலா கறி ரெடி!

By Devaki Jeganathan
13 Jun 2025, 12:50 IST

வெயில் காலத்தில் அதிகமாக தயிர் சாப்பிடுவது வழக்கம். ஆனால், எப்போதும் ஒரே மாதிரியாக தயிரை சாப்பிட்டால் சலித்துவிடும். அந்தவகையில், தயிரை வைத்து சுவையான தயிர் மசாலா கறி செய்து சாப்பிடுங்கள். சுவை அட்டகாசமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

பூண்டு மிளகாய் விழுது செய்ய - பூண்டு - 15 பற்கள், காஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி.

தேவையான பொருட்கள்

தயிர் மசாலா கறி செய்ய - தயிர் - 400 கிராம், எண்ணெய் - 3 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, கறிவேப்பிலை, வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, பூண்டு மிளகாய் விழுது, கொத்தமல்லி இலை நறுக்கியது.

செய்முறை படி - 1

சிறிய உரலில் பூண்டு, காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கொரகொரப்பாக இடித்து கொள்ளவும். தயிரை நன்கு கடைந்து வைத்து கொள்ளவும்.

செய்முறை படி - 2

பானில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம் வறுக்கவும். பெருங்காய தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து விடவும்.

செய்முறை படி - 3

வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு, பூண்டு மிளகாய் விழுது சேர்த்து கலந்து விடவும்.

செய்முறை படி - 4

அடுத்து தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு கடைந்த தயிரை சேர்த்து கலந்து விடவும்.

செய்முறை படி - 5

இப்போது, இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து கலந்தால் சுவையான தயிர் மசாலா கறி தயார். இதை சாதம், தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.