உங்களுக்கு எப்பவும் பால் பாயாசம் சாப்பிட்டு சலித்து போய்விட்டதா? அப்போ இந்த முறை மாம்பழ பாயசம் ட்ரை பண்ணுங்க. வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவாங்க. இதோ ரெசிபி.
தேவையான பொருட்கள்
மாம்பழ விழுது - 3 கப் (250 மி.லி கப்), பால் - 1 லிட்டர், வேகவைத்த ஜவ்வரிசி - 1/4 கப், சர்க்கரை - 1/2 கப், ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி, சேமியா - 1/2 கப், முந்திரி பருப்பு, குங்குமப்பூ, திராட்சை, நெய்.
செய்முறை படி - 1
ஒரு கடாயில் சிறிது நெய் சேர்த்து முந்திரி, திராட்சையை வறுக்கவும். அதே கடாயில் மேலும் சிறிது நெய் சேர்த்து அரை கப் சேமியா வறுக்கவும்.
செய்முறை படி - 2
ஒரு சாஸ் பானில், ஒரு லிட்டர் பால் சேர்த்து கொதிக்க விடவும். பால் கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள சேமியா சேர்த்து வதக்கவும்.
செய்முறை படி - 3
வேகவைத்த ஜவ்வரிசியை கால் கப் சேர்த்து ஒன்றாக கலக்கவும். அரை கப் சர்க்கரை சேர்த்து மீண்டும் கலக்கவும் மற்றும் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள் மற்றும் சில குங்குமப்பூ இழைகளை சேர்க்கவும்.
செய்முறை படி - 4
வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்க்கவும். அடுப்பை அணைத்து ஆறவிடவும். முழுமையாக ஆறியதும், மூன்று கப் மாம்பழக் கூழ் சேர்த்து நன்கு கலக்கவும்.
செய்முறை படி - 5
நறுக்கிய பிஸ்தா மற்றும் நறுக்கிய மாம்பழத் துண்டுகளால் அலங்கரிக்கவும். மாம்பழ பாயசம் நன்றாகவும் குளிர்ச்சியாகவும் பரிமாற தயாராக உள்ளது.