தேவையான பொருட்கள்
தக்காளி - 4, ராஜ்மா - 1 கப் ஊறவைத்தது, தண்ணீர் - 3 கப், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், எண்ணெய், சீரகம் - 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, வெங்காயம் - 3 துருவிய, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தேவையான பொருட்கள்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, கசூரி மேத்தி, கொத்தமல்லி இலை, நெய் - 2 மேசைக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி, இஞ்சி, பச்சை மிளகாய் - 2.
செய்முறை படி - 1
ஒரு மிக்ஸி ஜாரில் நான்கு நறுக்கிய தக்காளிகளை போட்டு நன்றாக அரைத்து ப்யூரியாக மாற்றவும். அரைத்த விழுதை வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். ராஜ்மாவை நன்றாக கழுவி, 8 மணி நேரம் ஊற விடவும்.
செய்முறை படி - 2
8 மணி நேரத்திற்குப் பிறகு, தண்ணீரை வடிகட்டி விடவும். ஒரு பிரஷர் குக்கர்ல, ஊற வைத்த ராஜ்மா, மூன்று கப் தண்ணீர், ஒரு டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள், ஒரு ப்ரியாணி இலை, இரண்டு ஏலக்காய், இரண்டு கிராம்பு, ஒரு சின்ன துண்டு பட்டை, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.
செய்முறை படி - 3
குக்கர மூடி நான்கு விசில் வரும் வரை வேகவைத்து, பிறகு அழுத்தம் குறைய விடவும். திறந்து, ராஜ்மா நன்றாக வெந்து இருப்பதையும், அதன் வடிவம் மாறாமல் இருப்பதையும் பாருங்கள். ஒரு பாத்திரத்தில் மூன்று மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் இரண்டு வத்தல் மற்றும் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்க்கவும்.
செய்முறை படி - 4
சீரகம் பொங்கியதும், ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு துருவிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் தங்கம் நிறமாக மாறும் வரை வதக்கவும். இப்போது அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
செய்முறை படி - 5
ஒரு டீஸ்பூன் தனியா தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் சீரக தூள் சேர்த்து வெங்காய மசாலாவுடன் கலந்து வதக்கவும். அரைத்த தக்காளி ப்யூரி மற்றும் தேவையான உப்பும் சேர்த்து நன்றாக கிளறவும். வெந்த ராஜ்மாவை அதன் நீருடன் சேர்த்து, மசாலாவுடன் நன்றாக கிளறவும்.
செய்முறை படி - 6
ஒரு டீஸ்பூன் கரம் மசாலா தூளை சேர்த்து கிளறவும். மிதமான அடுப்பில் பாத்திரத்தை மூடி 15 நிமிடம் மசிய விடவும். பிறகு கொத்தமல்லி இலை மற்றும் நசுக்கிய கசூரி மெத்தியைச் சேர்க்கவும்.
செய்முறை படி - 7
ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி, அதில் ஒரு டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் பெருங்காயத் தூள், ஒரு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், சில இஞ்சி ஜூலியன் துண்டுகள் மற்றும் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து, இந்த தாளிப்பை மசாலாவிற்கு மேல் ஊற்றவும். சுவையான டாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா தயார்!