தினமும் சாஃப்ரான் டீ குடிச்சி பாருங்க.. எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்

By Gowthami Subramani
25 May 2025, 21:24 IST

அன்றாட வழக்கத்தில் குங்குமப் பூ தேநீரைச் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இதில் குங்குமப் பூ தேநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்

எடையிழப்புக்கு

குங்குமப்பூ தேநீர் அருந்துவது பசியைக் கட்டுப்படுத்தவும், தேவையற்ற சிற்றுண்டிகளைக் குறைக்கவும் உதவுகிறது. இது உடலில் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கவும், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரவும் உதவுகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

குங்குமப்பூ டீ அருந்துவது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது வீக்கம் மற்றும் வாயு போன்ற பிரச்சினைகளைக் குறைக்கிறது. இவை குடல் ஆரோக்கியத்தை மெதுவாக ஆதரிக்கிறது. மேலும் இது உணவை ஜீரணிக்க எளிதாக்குகிறது

இதய ஆரோக்கியத்திற்கு

இவை உடலில் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்த ஓட்ட அளவை மேம்படுத்துகிறது. இதைத் தொடர்ந்து குடிப்பது காலப்போக்கில் இதய ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது

சருமத்தை பளபளப்பாக்க

குங்குமப்பூவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை ஊட்டமளித்து, ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. இதைத் தொடர்ந்து குடிப்பதன் மூலம் சருமத்தின் நிறத்தை பிரகாசமாக்கி, பளபளப்பான சருமத்தைப் பெறலாம்

மூளை ஆரோக்கியத்திற்கு

குங்குமப்பூவில் நினைவாற்றல், மூளை செயல்பாடு, கவனம் செலுத்தும் சேர்மங்கள் நிறைந்துள்ளது. இவை வயதாகும்போது மனதை கூர்மையாக வைத்திருக்க உதவும் ஒரு சிறந்த வழியாகும்

நல்ல மனநிலைக்கு

சோர்வாக உணர்ந்தால், ஒரு கப் சூடான குங்குமப்பூ தேநீர் அருந்தலாம். இது செரோடோனின் அளவை அதிகரிப்பதாகவும், பதட்டத்தைக் குறைக்கவும், நேர்மரை எண்ணங்களைத் தரவும் உதவுகிறது