மலச்சிக்கல் பொதுவாக வயிறு தொடர்பான பிரச்சனையாகும். இது ஒவ்வொரு நபரும் எப்போதாவது ஒருமுறை அனுபவிக்கும் ஒன்றாகும். இதைத் தவிர்க்க சில ஆரோக்கியமான சாறுகளை அருந்தலாம். இதில் மலச்சிக்கல்லைப் போக்க உதவும் சாறுகளைக் காணலாம்
எலுமிச்சைச் சாறு
மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட பிரபலமான சாறுகளில் எலுமிச்சைச் சாறும் ஒன்றாகும். இது வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்ததாகும். இவை செரிமான மண்டலத்தில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது
பேரிக்காய் சாறு
மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற பேரிக்காய் சாறு மற்றொரு சிறந்த வழியாகும். இதில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் கணிசமான அளவு சர்பிடால் உள்ளது. இது செரிமான பிரச்சனையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறந்த தேர்வாகும்
ஆரஞ்சு சாறு
ஆரஞ்சுகளில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை குடல் இயக்கத்தைத் தூண்டுகிறது. மேலும் இதில் உள்ள ஃபிளாவோனால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது
அன்னாச்சி பழச்சாறு
அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற நொதி உள்ளது. இது மலச்சிக்கல்லை எளிதாக்கவும், வீக்கம் மற்றும் வயிற்றுப் பிடிப்பைக் குறைக்கவும் உதவுகிறது
ப்ரூன் சாறு
இதில் நார்ச்சத்து மற்றும் சர்பிடால் போன்றவை நிறைந்துள்ளது. இது மலச்சிக்கல்லுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இது தவிர ப்ரூன் சாற்றில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்ததாகும்