லுகுமா என்ற பழத்திலிருந்தே லுகுமா பவுடர் தயாரிக்கப்படுகிறது. இது சத்தானதாக மட்டுமல்லாமல் சுவையானதும் ஆகும். இதை நம் உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
செரிமான ஆரோக்கியத்திற்கு
லுகுமா பவுடர் நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை செரிமானத்திற்கு உதவுவதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த
இந்த பவுடர் இனிப்புத்தன்மை இருந்த போதிலும், இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்புவோர்க்கு சிறந்த தேர்வாகும்
இதய ஆரோக்கியத்திற்கு
லுகுமா பவுடரில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது
நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்க
லுகுமா பவுடரானது துத்தநாகம் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். எனவே இது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
வீக்கத்தைக் குறைக்க
லுகுமா பவுடரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. இதன் மூலம் உடலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கவும், வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
லுகுமாவில் உயர் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது சரும ஆரோக்கியத்திற்குத் தேவையான கொலாஜன் உற்பத்தியில் பங்களிக்கிறது. எனவே இது பளபளப்பான, இளமை சருமத்தைப் பெற உதவுகிறது