உடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்துக்கள் மிகவும் இன்றியமையாததாகும். கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் என இருவகைகள் உண்டு. இதில் அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
எடை மேலாண்மைக்கு
அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது முழுமை உணர்வைத் தருகிறது. இது பசியைக் கட்டுப்படுத்தவும், உடல் எடை மேலாண்மைக்கும் பெரிதும் உதவுகிறது
குடல் ஆரோக்கியத்திற்கு
நார்ச்சத்து உணவுகள் ப்ரீபயாடிக் ஆக செயல்படுகிறது. இது குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது
செரிமான ஆரோக்கியத்திற்கு
அன்றாட உணவில் நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்வது குடலியக்கத்தை ஊக்குவிக்கிறது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல்லைத் தடுக்கிறது
நீரிழிவு அபாயத்தைக் குறைக்க
சர்க்கரை உறிஞ்சுவதை மெதுவாக்குவதில் நார்ச்சத்து உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது
கொலஸ்ட்ராலைக் குறைக்க
ஓட்ஸ், பாதாம், காய்கறிகள், பழங்கள் போன்ற கரையக்கூடிய நார்ச்சத்து உணவுகள் உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது, இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது
இதய ஆரோக்கியத்திற்கு
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கொலஸ்ட்ராலைக் குறைப்பதுடன், இரத்த அழுத்தம் மற்றும் வீக்கத்தையும் குறைக்கிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிக்கும்
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த
அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் சருமத்தில் முகப்பரு தோன்றுவது குறைவதுடன், தெளிவான சருமத்திற்கு வழிவகுக்கிறது