வெள்ளரி சாப்பிடும் போது பெரும்பாலும் வெள்ளரி விதைகளையும் சேர்த்து சாப்பிடுவோம். ஆனால் அதை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் பெறலாம் என்பது தெரியுமா? இதில் வெள்ளரி விதை தரும் நன்மைகளைக் காணலாம்
ஊட்டச்சத்துக்கள்
வெள்ளரி விதையில் வைட்டமின்கள் பி, சி, கே மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
எடை ஆரோக்கியத்திற்கு
வெள்ளரி விதைகளில் அதிக நார்ச்சத்து இருப்பதால் இவை உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த நார்ச்சத்துக்கள் நீண்ட நேரம் முழுமையாக உணரவைப்பதுடன், எடை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது
செரிமான ஆரோக்கியத்திற்கு
இந்த விதைகளில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. மேலும் இது வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. கூடுதலாக, மலச்சிக்கலைத் தடுக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது
கார்டியோவாஸ்குலார் ஆரோக்கியத்திற்கு
வெள்ளரி விதையில் உள்ள மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது. இதை போதுமான அளவு உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் போன்ற இதயம் சார்ந்த பிரச்சனைகளைக் குறைக்கிறது
சிறுநீரக ஆரோக்கியத்திற்கு
வெள்ளரிக்காய் விதைகளில் உள்ள அதிக நீர்ச்சத்து மற்றும் டையூரிடிக் பண்புகள், சிறுநீர் உற்பத்தியை ஊக்குவித்து உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இது ஒட்டுமொத்த சிறுநீரக ஆரோக்கியம், சிறுநீர் பாதை செயல்பாட்டிற்கு பயனுள்ளதாக அமையும்
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
இந்த விதைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின் சி உட்கொள்ளல் உடலை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது
ஆரோக்கியமான சருமத்திற்கு
வெள்ளரி விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் சருமத்திற்கு நன்மை பயக்கும். இவை வீக்கத்தைக் குறைக்கவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், இளமை நிறத்திற்கு பங்களிக்கவும் உதவுகிறது