குளிர்காலத்தில் தேசி நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

By Gowthami Subramani
15 Dec 2024, 13:00 IST

குளிர்காலத்தில் நெய் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் குளிர்காலத்தில் தேசி நெய் சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்பதைக் காணலாம்

உடல் எடையிழப்புக்கு

நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இது கெட்ட கொழுப்பை நீக்கி உடல் எடையைக் குறைக்கிறது. இதன் மூலம் குளிர்கால உடல் பருமன் பிரச்சனையைத் தவிர்க்கலாம்

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

குளிர்ந்த காலநிலையில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க தேசி நெய்யை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது நோயெதிர்ப்பு அமைப்பை மேம்படுத்தி பல்வேறு நோய்த்தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது

மலச்சிக்கல் குணமாக

குளிர்காலத்தில் கனமான அல்லது பொரித்த உணவுகளை உட்கொள்ள ஆர்வம் அதிகரிக்கும். இது மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தலாம். இந்நிலையில் தினமும் 1 டீஸ்பூன் நெய் எடுத்துக் கொள்வது வயிறு சார்ந்த பிரச்சனைகளை நீக்க உதவுகிறது

வெப்பத்தை அளிக்க

குளிர்காலத்தில் உடலை சூடாக வைக்கவே பலரும் விரும்புகின்றனர். இதற்கு உணவில் நெய்யைச் சேர்ப்பது உடலுக்கு வெப்பத்தை அளிக்கிறது

சரும ஆரோக்கியத்திற்கு

குளிர்காலத்தில் ஏற்படும் வறண்ட சரும பிரச்சனைக்கு அன்றாட உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம். இது சருமத்தை பிரகாசமாக வைக்க உதவுகிறது

மூட்டு வலி நிவாரணத்திற்கு

நெய்யில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. குளிர்காலத்தில் நெய் உட்கொள்வது குளிர்கால மூட்டு வலியிலிருந்து பாதுகாக்க வழிவகுக்கிறது

மூளை ஆரோக்கியத்திற்கு

நெய்யில் நிறைந்திருக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் மூளையின் செயல்பாடு மற்றும் அறிவாற்றல் திறனை மேம்படுத்த உதவுகிறது