குளிர் காலத்தில் அதிக பேரீச்சம் பழம் சாப்பிட்டால் இந்த 5 கோளாறுகள் ஏற்படும்!

By Kanimozhi Pannerselvam
14 Dec 2023, 19:30 IST

எலும்புகளை வலுவாக்கும்

எலும்புகளை வலுப்படுத்தவும், செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பேரீச்சம்பழம் பயன்படுகிறது.

செரிமான கோளாறுகள்

பேரீச்சம்பழம் வெப்ப தன்மை நிறைந்தது. எனவே இதனை அதிக அளவில் உட்கொள்வது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

உடல் எடை

பேரிச்சம்பழம் அதிக கலோரி கொண்ட உலர் பழங்களமாகும். இதனை தினமும் அதிகமாக உட்கொள்வது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

சரும பிரச்சனைகள்

பேரீச்சம்பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் அரிப்பு மற்றும் சொறி போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படும். இதில் உள்ள சல்பைட் காரணமாக இது நிகழ்கிறது.

தசை வலி

பேரீச்சம்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இதை அதிகமாக உட்கொண்டால், தசை வலி மற்றும் கூச்ச உணர்வு ஏற்படலாம்.

சர்க்கரை நோய்

பேரீச்சம்பழத்தை தொடர்ந்து அதிக அளவில் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம், இது நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது.