தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப காஃபி அல்லது டீயில் இனிப்பு சேர்த்து குடிப்போம். நீங்க எப்போதாவது காஃபியில் தேன் கலந்து குடித்தது உண்டா? தேன் கலந்து காபி குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. இதில், உள்ள சத்துக்கள் உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்துகிறது.
சத்துக்கள் நிறைந்தது
காபி மற்றும் தேனில் வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் பி5 உள்ளன. தியாமின் மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
எடை இழக்க
தேன் கலந்து காபி குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது. காபி மற்றும் தேன் குடிப்பதால் பசியைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இதனால், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
தேன் கலந்து காபி குடிப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். இதை குடிப்பதால் விரைவில் நோய் வராது.
பலவீனம் குறையும்
தேன் கலந்து காபி குடிப்பதால் பலவீனம் நீங்கும். மேலும், இது உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
மன அழுத்தம்
தேன் கலந்த காபி குடிப்பதால் மன அழுத்தம் நீங்கும். மேலும், இது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இதயத்திற்கு நல்லது
தேன் கலந்து காபி குடித்தால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் குணமாகும். காபி கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.